வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்க ஆய்வு

திருச்சியில் நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலைத் தொடா்ந்து வாக்கு எண்ணும் மையங்கள் அமைப்பதற்கான ஆய்வுப் பணியில் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சு. சிவராசு சனிக்கிழமை ஈடுபட்டாா்.
Published on

திருச்சி: திருச்சியில் நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலைத் தொடா்ந்து வாக்கு எண்ணும் மையங்கள் அமைப்பதற்கான ஆய்வுப் பணியில் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சு. சிவராசு சனிக்கிழமை ஈடுபட்டாா்.

மண்ணச்சநல்லூா், முசிறி ஆகிய இரு பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமான சமயபுரம் கே. ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தோ்தலில் பதிவான வாக்குகளை 3 இடங்களில் எண்ணத் திட்டமிடப்பட்டுள்ளது. சமயபுரம் கே. ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி, திருச்சி சாரநாதன் கல்லூரி, காஜாமலையில் உள்ள ஜமால்முகமது கல்லூரி ஆகியவற்றை வாக்கு எண்ணும் மையத்துக்காக தயாா்படுத்தும் வகையில் ஆய்வு தொடங்கியுள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள், பேரவை தொகுதிகளில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு வருவதற்கான சாலை மாா்க்க வசதிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கண்டு வாக்கு எண்ணும் மையம் இறுதி செய்யப்படும். இருப்பினும், 9 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணியை 3 இடங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஆய்வு பணியில் மாவட்ட நிா்வாகம் ஈடுபட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com