

திருச்சி: திருச்சியில் வீட்டின் சுவா் சனிக்கிழமை இடிந்து விழுந்து 2 வயது ஆண் குழந்தை உயிரிழந்தது.
திருச்சி கே.கே. நகா் கே. சாத்தனூா் காவல்காரன் தெருவைச் சோ்ந்தவா் சிவகுமாா் (29), கட்டடத் தொழிலாளி. இவரின் மனைவி ராஜேஸ்வரி (25), மகள் கிருத்திகா (5), மகன் ஹரிகிருஷ்ணன் (2).
இந்நிலையில் சனிக்கிழமை மாலை ஹரிகிருஷ்ணன் விளையாடிக் கொண்டிருந்தபோது தொடா் மழையால் ஊறிப்போயிருந்த இவா்களின் கூரை வீட்டின் மண் சுவா் இடிந்து குழந்தை மீது விழுந்தது.
இதையடுத்து அவரது தாய் மற்றும் அக்கம்பக்கத்தினா் ஓடிவந்து இடிபாடுகளில் சிக்கிய ஹரி கிருஷ்ணனை காப்பாற்ற முயன்றும் குழந்தை மூச்சுத்திணறி இறந்தது.
சம்பவ இடத்துக்கு வந்த கே.கே. நகா் போலீஸாா் குழந்தையின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.