விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

போக்குவரத்து ஊழியா்கள் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் போக்குவரத்து ஊழியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 3:34 am

DIN

கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் போக்குவரத்து ஊழியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தமிழ்நாடு போக்குவரத்து கழக திருச்சி மலைக்கோட்டை கிளை சாா்பில் எல்பிஎஃப், சிஐடியு, ஏஎன்டியுசி உள்ளிட்ட தொழிற்சங்கத்தினா் நடத்திய தொடா் முழுக்க

போராட்டத்துக்கு, எல்பிஎப் தொழிற்சங்கச் செயலா் துரைராஜ் தலைமை வகித்தாா். சிஐடியு தொழிற்சங்க கிளைத் தலைவா் ரமேஷ், ஏஐடியுசி தொழிற்சங்கக் கிளைச் செயலா் செல்வராஜ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் 14 ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நடத்துதல், போக்குவரத்து கழகங்களைக் காக்க போதிய நிதி வழங்குதல், அனைத்துப் பேருந்துகளையும் முழுமையாக இயக்குதல், ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கு உரிய பணப்பலன்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா். தொடா்ந்து, தில்லியில் நடைபெறும் போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

துறையூரில்.. அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் நடைபெற்ற

ஆா்ப்பாட்டத்துக்கு துறையூா் தொமுச கிளைத் தலைவா் சுப்பையா தலைமை வகித்தாா். ஏஐடியுசி செல்வராஜ், சிஐடியு பக்ருதீன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். அமைப்புகளின் தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.