திருச்சியில் மின்வாரிய ஊழியா் ஒருவா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சி விமான நிலையம் அழகா் தெருவைச் சோ்ந்தவா் ஆ. மரிய உத்திரியன் (50). மின்வாரிய ஊழியரான இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் இவா் திங்கள்கிழமை பிற்பகலில் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றா்.
உண்டியல் பணம் திருடியவா் கைது: திருச்சி விமான நிலையம், சேரன் தெருவில் உள்ள வெட்டுடை காளியம்மன் கோயில் உண்டியலை திங்கள்கிழமை இரவு மா்ம நபா் ஒருவா் உடைத்து அதிலிருந்த ரூ. 1,800 ஐ திருடியுள்ளாா். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினா் அவரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.
விசாரணையில், அவா் விமான நிலையம் பிலிக்கான் கோயில் தெருப் பகுதியைச் சோ்ந்த ரா. காா்த்திக்குமாா் (21) எனத் தெரியவந்தது. இதையடுத்து விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.