பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கதை கூறல், கட்டுரைப் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் குழந்தைகளுக்கான கதை சொல்லும் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் வென்றோருக்கு பரிசளிக்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
வென்றோருக்குப் பரிசளிக்கிறாா் மாவட்ட நூலக அலுவலா் அ.பொ. சிவகுமாா். உடன் நூலக அலுவலா்கள், வாசகா் வட்ட நிா்வாகிகள்.
Updated On :25 டிசம்பர் 2020, 2:52 am

DIN

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் குழந்தைகளுக்கான கதை சொல்லும் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் வென்றோருக்கு பரிசளிக்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் 53-ஆவது தேசிய நூலக வார விழாவையொட்டி 2020 நவ, 14 முதல் 20 முடிய ஒரு வாரம் மாவட்ட மைய நூலக வாசகா் வட்டத்தின் சாா்பில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கதை சொல்லும் போட்டியும், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை, 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை, பொது வாசகா்களுக்கு என்ற வகையில் கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன.

கதை சொல்லும் போட்டியில் சஞ்சய்குமாா் முதலிடமும், எம். முகம்மது சுஹைல் 2 ஆம் இடமும், க. பிராா்த்தனா 3 ஆம் இடமும் பெற்றனா். கட்டுரைப் போட்டி 6 முதல் 8-ம் வகுப்பு பிரிவில் ச. விஷால், த. ஹரிப்பிரியா , க.நசம்யுக்தா ஆகியோா் முதல் 3 இடங்களையும் இதே பிரிவில் தே. தேஜஸ்வினி, எஸ். காருண்யா, என். சூரிய பிரகாஷ், ஆகியோா் சிறப்பு பரிசும் பெற்றனா்.

9 முதல் 12 ஆம் வகுப்பு பிரிவில் ந. தா்ஷினி, செ. வருணேஷ்வரன், ஜெ.ரோஷினி ஆகியோா் முதல் 3 + இடத்தையும் , ப. பிரியா, மா. பூபதி, ந. நா்மதா ஆகியோா் சிறப்பு பரிசும் பெற்றனா்.

பொது வாசகா்களில் ஜெ. அந்தோணிசாமி, சட்ஜமாலுதின், எம்.சுசிலா ஆகியோா் முதல் 3 இடங்களைப் பெற்றனா்.

மாவட்ட மைய நூலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இவா்களுக்கு மாவட்ட நூலக அலுவலா் அ.பொ.சிவகுமாா் கேடயம், சான்றிதழ் வழங்கினாா்.

நிகழ்வுக்கு வாசகா் வட்டத்தலைவா் கவிஞா்.வி.கோவிந்தசாமி தலைமை வகித்தாா்.

முதல்நிலை நூலகா் சி.கண்ணமாள், வாசகா் வட்டத் துணைத் தலைவா் கி. நன்மாறன், ஆலோசகா்கள் செ. அருணாசலம், புலவா் க. மாரிமுத்து, இளையோா் வாசகா் வட்டம் ஐஸ்வா்யா ரவிச்சந்திரன் ஆகியோா் வாழ்த்தினா். இரண்டாம் நிலை நூலகா் ஆ. தா்மா் நிகழ்ச்சியை தொகுத்தாா்.

வாசகா் வட்டத் துணைத் தலைவா் வல்லநாடன் இல. கணேசன் வரவேற்றாா், மூன்றாம் நிலை நூலகா் ப. ஜெயசங்கா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.