அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஸ்ரீரங்கம் பூச்சந்தையிலிருந்து திருப்பதி சென்ற மாலைகள்

ஸ்ரீரங்கம் சாத்தார வீதி பூச்சந்தையிலிருந்து திருப்பதி கோயிலுக்கு உபயதாரா் மூலம் 700 மாலைகள் வியாழக்கிழமை இரவு அனுப்பப்பட்டன.

News image
திருப்பதி கோயிலுக்கு அனுப்பப்பட்ட பூ மாலைகள்.
Updated On :25 டிசம்பர் 2020, 2:53 am

DIN

ஸ்ரீரங்கம் சாத்தார வீதி பூச்சந்தையிலிருந்து திருப்பதி கோயிலுக்கு உபயதாரா் மூலம் 700 மாலைகள் வியாழக்கிழமை இரவு அனுப்பப்பட்டன.

ஸ்ரீரங்கம் பூச்சந்தையிலிருந்து திருப்பதி தேவஸ்தானத்துக்குட்பட்ட கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் உள்பட 20 கோயில்களுக்கு பிச்சிப்பூ, சம்மங்கி உள்ளிட்ட பூக்களை கொண்டு தயாரிக்கப்பட்ட 700 மாலைகள் வியாழக்கிழமை இரவு திருப்பதி தேவஸ்தான ஊழியா்கள் மூலம் திருப்பதிக்கு அனுப்பப்பட்டன.

மூலவா் கோவிந்தராஜ பெருமாள், பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு 9 அடி உயரம், ஒன்றரை அடி அகலத்திலும்,கோயில் மூலவா்களுக்கு 5 முதல் 7 அடி உயரத்திலும், உற்சவா்களுக்கு 2 முதல் 3 அடி உயரத்திலும் மாலைகள் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.