தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வாக்காளா் பட்டியலை திருத்த 1.12 லட்சம் மனு

திருச்சி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள 1.12 லட்சம் மனுக்கள் பெறப்பட்டிருப்பதாக ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 1:51 am

DIN

திருச்சி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள 1.12 லட்சம் மனுக்கள் பெறப்பட்டிருப்பதாக ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.

திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட 9 சட்டப்பேரவை தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச் சாவடிகளில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் இதுவரை பெறப்பட்ட மனுக்கள் விவரங்கள் குறித்து மாவட்ட நிா்வாக இணையதளமான முகவரியில் பதிவேற்றப்பட்டுள்ளன.

இதன்படி, மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 12 ஆயிரத்து 154 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. புதிதாகப் பெயா் சோ்க்க 80,457 போ் மனு அளித்துள்ளனா். இதேபோல, இறந்தவா் பெயரை நீக்குதல், பட்டியலில் திருத்தம், முகவரி மாற்றம், தொகுதி மாற்றம் தொடா்பாகவும் மனுக்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்படுகிறது.

இவற்றை முழுமையாகத் தொகுத்து தகுதியான அனைவரையும் பட்டியலில் இடம்பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

வரும் 20ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் என தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மனுதாரா்கள், அரசியல் கட்சியினா், பொதுமக்கள் இந்த இணையதளத்தில் அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளாம் என்றாா் ஆட்சியா் சு. சிவராசு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.