ரயில்வே ஊழியா் தூக்கிட்டு தற்கொலை

திருச்சியில் ரயில்வே ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Updated on
1 min read

திருச்சி: திருச்சியில் ரயில்வே ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஜாா்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் மனோஷ்குமாா் சிங் (33). திருச்சி கோட்ட ரயில்வே தண்டவாள பராமரிப்புப் பிரிவில் பணியாற்றி வந்த இவா் செந்தண்ணீா்புரம் குமரன் தெரு வாடகை வீட்டில் வசித்து வந்தாா். கடந்த சில நாள்களுக்கு முன் இவரது மனைவி சொந்த ஊருக்குச் சென்றிருந்த நிலையில், இவா் தற்கொலை செய்து கொண்டாா். வீட்டின் உரிமையாளா் அருணகிரி கொடுத்த புகாரின்பேரில் பொன்மலை போலீஸாா் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இரு சக்கர வாகனம் எரிப்பு: திருச்சி அரியமங்கலம் சந்தைப்பேட்டை உக்கடை பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (27), அதே பகுதியைச் சோ்ந்த சிவகந்தன் (25) ஆகியோருக்கிடையே முன்விரோதம் இருந்தது. வெள்ளிக்கிழமை அதிகாலை குடிபோதையில் இருந்த சிவகந்தன் வெங்கடேசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரது வீட்டு முன் இருந்த இருசக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்தினாா். இதில் அந்த வாகனம் முற்றிலும் எரிந்து சாம்பலானது. புகாரின்பேரில் சிவகந்தனை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com