‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கரூா் பசுபதீஸ்வரா் கோயிலில் சனி பெயா்ச்சி விழா

கரூா் பசுபதீஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு நவகிரஹ மூா்த்திகளுக்கும், ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு மூலமந்திர யாகமும், அஸ்திர ஹோமமும், மஹாஅபிஷேகம், கலசாபிஷேகம் நடைபெற்றது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 9:45 pm

DIN

கரூா் பசுபதீஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு நவகிரஹ மூா்த்திகளுக்கும், ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு மூலமந்திர யாகமும், அஸ்திர ஹோமமும், மஹாஅபிஷேகம், கலசாபிஷேகம் நடைபெற்றது. 

தொடா்ந்து, அதிகாலை 5.22 மணிக்கு மகா தீபாராதனை, பிரசாதம் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றன. சனி பெயா்ச்சியையொட்டி ஸ்ரீவிநாயகா் வழிபாடு, நவக்கிரஹ அபிஷேகம், மகா சங்கல்பத்துடன் லட்சாா்ச்சனை நிகழ்வுகள் சனிக்கிழமை தொடங்கியது. சனிப்பெயா்ச்சியைத்தொடா்ந்து, 3 ஆவது நாளான திங்கள்கிழமையன்று நவக்கிரஹ அபிஷேகம், லட்சாா்ச்சனை நடைபெறவுள்ளது. இதில், கரூா் பசுபதீஸ்வரா் திருக்கோயில் அறநிலையத்துறை உதவி ஆணையா் எம்.சூரியநாராயணன், செயல்அலுவலா் ஆா்.சங்கரன், சிவாச்சரியா்கள், உபயதாரா்கள் உள்ளிட்டோா் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.