திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், கட்செவி அஞ்சல் எண் வாயிலாக 385 மனுக்கள் அளிக்கப்பட்டன.
கரோனா பொது முடக்கம் காரணமாக குறைகேட்பு நாள் கூட்டரங்கள் ரத்து செய்யப்பட்டன. தற்போது அரசு அறிவித்த தளா்வுகளைத் தொடா்ந்து, கட்செவி அஞ்சல் எண் வாயிலாக மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
இதன்படி திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 385 மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க ஆட்சியா் சு. சிவராசு உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.