பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அமெரிக்க எரிபொருள் கட்டமைப்பு முழுமையாக அழிக்கப்படும்! ஈரான் சூளுரை

அமெரிக்காவின் எரிபொருள் கட்டமைப்பு அழிக்கப்படும் என ஈரான் சூளுரை...

News image

கோப்புப்படம் - AP

Updated On :14 மார்ச் 2026, 3:58 am

அமெரிக்காவுடன் தொடர்புடைய அனைத்து எரிபொருள் உள்கட்டமைப்புகளும் அழித்து சாம்பலாக்கப்படும் என்று ஈரான் பாதுகாப்புப் படை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான கார்க் தீவு மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியிருக்கும் நிலையில், அந்த தீவு முற்றிலும் அழிக்கப்பட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்தை கார்க் தீவில் இருந்துதான் கையாண்டு வருகிறார்கள். இந்த தீவின் மீது அமெரிக்காவின் தாக்குதல் ஈரானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஈரானின் ராணுவப் படைப் பிரிவான ட்டாம் அல்-அன்பியா மத்திய தலைமையகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ”ஈரானிய உள்கட்டமைப்பு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அனைத்து பிராந்தியங்களிலும் உள்ள அமெரிக்காவுடன் தொடர்புடைய அனைத்து எண்ணெய், எரிசக்தி உள்கட்டமைப்புகளையும் தாக்கி சாம்பலாக்குவோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக டிரம்ப் வெளியிட்ட பதிவில், “மத்திய கிழக்கின் மிகவும் சக்திவாய்ந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கார்க் தீவில் உள்ள ஒவ்வொரு ராணுவ இலக்குகளையும் குறிவைத்து அழித்துள்ளோம். முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன” எனத் தெரிவித்திருந்தார்.

ஈரான் தரப்பில் இருந்து கார்க் தீவில் எவ்வளவு சேதம் ஏற்பட்டது என்ற விளக்கம் அளிக்க மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில், கார்க் தீவில் உள்ள விமானத் தளம், ஜோஷென் கடல் தளம், விமான நிலையக் கட்டுப்பாட்டு கோபுரம், ஹெலிகாப்டர் ஹேங்கர் உள்ளிட்டவை அமெரிக்க தாக்குதலில் சேதமடைந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

Summary

US energy infrastructure will be completely destroyed! Iran warns

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.