வாஷிங்டன்: ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான கார்க் தீவில் உள்ள ராணுவ நிலைகளை அமெரிக்க ராணுவம் முற்றிலுமாக அழித்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான கார்க் தீவில் உள்ள ராணுவ நிலைகளை அமெரிக்க ராணுவம் முற்றிலுமாக அழித்துவிட்டதாக சனிக்கிழமை தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுக்கு மத்திய கிழக்குப் பகுதி முழுவதையும் ஆதிக்கம் செலுத்தி இஸ்ரேலை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததாகவும், ஆனால் அந்த "எண்ணங்கள் இப்போது அழிக்கப்பட்டுவிட்டன" என்றும் கூறியுள்ளார்.
டொனால்ட் டிரம்ப் தனது சொந்த சமூக ஊடக தளமான 'ட்ரூத் சோஷியல்' பதிவில், "ஈரானுக்கு மத்திய கிழக்குப் பகுதி முழுவதையும் ஆதிக்கம் செலுத்தி இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததாகவும், ஆனால், ஈரானைப் போலவே அந்த "எண்ணங்களும் இப்போது அழிக்கப்பட்டுவிட்டன" என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக, ஈரானின் மணிமகுடமான கார்க் தீவில் உள்ள ராணுவ நிலைகள் மீது ஒரு சக்திவாய்ந்த "குண்டுவெடிப்புத் தாக்குதலை" நடத்தியதாகவும், இதில் தீவின் ஒவ்வொரு ராணுவ நிலைகளையும் அமெரிக்க ராணுவம் "முற்றிலும் அழித்துவிட்டது".
இந்த தாக்குதல் சில நிமிடங்களுக்கு முன்பு, எனது வழிகாட்டுதலின் பேரில் அமெரிக்க ராணுவம் மிகவும் சக்திவாய்ந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இது மத்திய கிழக்கின் வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்த குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் ஒன்றாகும். மேலும் ஈரானின் மணிமகுடமான கார்க் தீவில் உள்ள ஒவ்வொரு ராணுவ நிலைகையும் முற்றிலுமாக அழித்துவிட்டன" என்று டிரம்ப் கூறினார்.
தற்போது, மனிதாபிமான அடிப்படையில் அங்குள்ள எண்ணெய் உள்கட்டமைப்புகளைத் தாக்கவில்லை. "எங்கள் ஆயுதங்கள் உலகம் இதுவரை அறிந்திராத மிகவும் சக்திவாய்ந்தவை மற்றும் அதிநவீனமானவை, ஆனால், மனிதாபிமானம்(கண்ணியம்) அடிப்படையில், தீவில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்பை நான் அழிக்க விரும்பவில்லை" என்று அவர் கூறினார்.
மேலும், ஈரான் அல்லது வேறு யாராவது ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் செல்வதில் தலையிடுவதாக ஏதாவது செய்தால், எனது முடிவை உடனடியாக மறுபரிசீலினை செய்வேன்.
எனது முதல் பதவிக்காலத்தின்போது, அமெரிக்க ராணுவத்தை உலகின் எந்த இடத்திலும், மிகவும் ஆபத்தான, சக்திவாய்ந்த மற்றும் பயனுள்ள படையாக மீண்டும் கட்டியெழுப்பினேன். மேலும், ஈரான் தாக்குதல்களை தொடர்ந்தால் ஹோர்முஸ் நீரிணை வழியையும் விட்டுவைக்க மாட்டேன் என எச்சரிக்கை விடுத்துள்ள டிரம்ப், எங்களது தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் சக்தி ஈரானிடம் இல்லை.... எங்களது தாக்குதல்களுக்கு எதிராக அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது!" என்று அவர் கூறினார்.
டெஹ்ரான் அணு ஆயுதங்களைப் பெற அனுமதிக்கப்படாது என்று மீண்டும் வலியுறுத்திய டிரம்ப், ஈரானிடம் ஒருபோதும் அணு ஆயுதம் இருக்காது. அமெரிக்காவையோ, மத்திய கிழக்கையோ அல்லது உலகையோ அச்சுறுத்தும் திறன் ஈரானுக்கு கிடையாது.
மேலும், டெஹ்ரான் அணு ஆயுதங்களைப் பெற அனுமதிக்கப்படாது என்று மீண்டும் வலியுறுத்திய டிரம்ப், ஈரானின் ராணுவத்தையும் அதன் நட்பு நாடுகளையும் சரணடையுமாறு எச்சரித்தவுடன், "ஈரானின் ராணுவமும், இந்த பயங்கரவாத ஆட்சியுடன் தொடர்புடைய மற்ற அனைவரும், தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, தங்கள் நாட்டில் எஞ்சியிருப்பதை காப்பாற்றிக்கொள்வதே புத்திசாலித்தனமாக இருக்கும்!". அங்கு எஞ்சியிருப்பதும் அதிகம் இல்லை என்று கூறியுள்ளார்.
‘ஈரானில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 13) என்ன நடக்கப் போகிறது எனப் பாருங்கள்’என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் எச்சரிக்கையை அடுத்து, டெஹ்ரான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1,000 இடங்களைக் குறிவைத்து முன்னெச்சரிக்கையின்றி அமெரிக்கா வெள்ளிக்கிழமை தீவிர தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Summary
Our Weapons are the most powerful and sophisticated that the World has ever known but, for reasons of decency, I have chosen NOT to wipe out the Oil Infrastructure on the Island
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றுவோம்: டொனால்ட் டிரம்ப்!

எண்ணெய் முனையமான ஈரானின் காா்க் தீவில் அமெரிக்கா தாக்குதல்: ராணுவ இலக்குகள் அழிப்பு

ஈரானின் மணிமகுடத்தைத் தாக்கிய அமெரிக்கா.. எண்ணெய் வளம் செழிக்கும் கார்க் தீவு!

அமெரிக்க எரிபொருள் கட்டமைப்பு முழுமையாக அழிக்கப்படும்! ஈரான் சூளுரை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


