ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் தீவிரம்: 1,000 இடங்களைக் குறிவைத்து குண்டு வீச்சு
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா ஆகியவை வெள்ளிக்கிழமை மீண்டும் தீவிர தாக்குதல் நடத்தின. பதிலுக்கு ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள கப்பல் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது.

ஈரான் தலைநகா் டெஹ்ரானில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் நொறுங்கிய கட்டட இடிபாடுகளுக்கு மத்தியில் மீட்புப் பணியில் ஈடுபட்ட மீட்புக் குழுவினா்.







