ஈரானின் பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி நிலையங்களைத் தாக்கிய இஸ்ரேல்!

ஈரானின் பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது குறித்து...

Israeli rescue teams search for missing people amid the rubble of a residential building a day after it was struck by an Iranian missile in Haifa, Israel, Monday, April 6, 2026.

ஈரானிய ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளான ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் இடிபாடுகள் - AP

Published On :6 ஏப்ரல் 2026, 9:47 pm IST

ஈரானின் பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் திங்கள்கிழமை (ஏப். 6) தாக்குதல் நடத்தியது.

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே கடந்த பிப்.28 ஆம் தேதி தொடங்கிய தாக்குதல்கள் தற்போதுவரை தொடர்ந்து வருகின்றன. இதனால் உலகின் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளவும், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கவும் அமெரிக்க அதிபர் விடுத்த காலக்கெடுவையும் ஈரான் நிராகரித்தது.

இந்த நிலையில், “ஈரானின் பெட்ரோ கெமிக்கல் உற்பத்தியில் சுமார் 50 சதவிகிதத்தை உற்பத்தி செய்துவந்த அந்நாட்டின் மிகப்பெரிய பெட்ரோ கெமிக்கல் நிலையத்தின் மீது இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன” என இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை உறுதிசெய்த ஈரான் அரசு, ”ஈரானின் மிகப்பெரிய பெட்ரோ கெமிக்கல் நிலையத்தை திங்கள்கிழமை தாக்கியதில், அந்தப் பகுதியில் உள்ள சிறப்புப் பொருளாதார எரிசக்தி மண்டலத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. இருப்பினும், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை” எனத் தெரிவித்தது.

மேலும், கடந்த வாரத்தில் ஈரானின் இரண்டாவது பெரிய பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தை இஸ்ரேல் தாக்கியிருந்த நிலையில் ஈரானின் 85 சதவிகித பெட்ரோ கெமிக்கல் உற்பத்தியை அழித்துள்ளதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

Summary

Israel carried out an attack on Iran's petrochemical production facilities on Monday (April 6).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.