புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி! புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி!
/

உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்!

உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை ஈரான் தாக்கியது பற்றி...

News image

ராஸ் லஃபான் தொழில் நகரம் மீது ஈரான் தாக்குதல் - X

Updated On :19 மார்ச் 2026, 9:50 am IST

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிவாயு ஆலையை ஈரான் தாக்கியதில் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானுடனான போரில் முக்கிய திருப்பமாக அந்நாட்டின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான கார்க் தீவின் மீது கடந்த வாரம் மிகப்பெரிய தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அங்கிருந்த ராணுவ நிலைகளை முற்றிலுமாக அழித்தது.

கடந்த 2 நாள்களில் ஈரானின் முக்கிய தலைவர்களான தேசிய பாதுகாப்புச் செயலாளர் அலி லார்ஜானி உள்பட மூவர் அமெரிக்காவால் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனிடையே, ஈரானின் தெற்கு பார்ஸில் உள்ள எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், புதன்கிழமை ஒரே நாளில் வளைகுடாவின் 9 நாடுகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உலகின் மிகப்பெரிய எரிவாயு ஆலையான ராஸ் லஃபான் தொழில் நகரம் மீது பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

மேலும், இந்த தாக்குதலால் தீ விபத்து ஏற்பட்டதாகவும் மிகப்பெரிய சேதமடைந்திருப்பதாகவும் கத்தார் அரசு தெரிவித்துள்ளது.

ராஸ் லஃபான் ஆலையில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஈரானின் எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது அமெரிக்காவுக்கு தெரியாது என்றும், ஈரான் எரிவாயு வயலை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டாம் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், வளைகுடா நாடுகளின் எரிபொருள் உற்பத்தி மையங்களை குறித்து ஈரான் தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Summary

Iran attacks world's largest LPG plant! Massive damage!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.