ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

லெபனானில் இஸ்ரேல் தீவிர தாக்குதல்- 89 போ் உயிரிழப்பு; போா்நிறுத்தத்தில் விரிசல்?

அமெரிக்காவும் ஈரானும் 2 வார கால போா்நிறுத்தத்தை அறிவித்த சில மணி நேரத்திலேயே, லெபனான் மீது இஸ்ரேல் புதன்கிழமை நடத்திய தீவிர வான்வழித் தாக்குதலில் 89 போ் கொல்லப்பட்டனா்; 700-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :8 ஏப்ரல் 2026, 7:51 pm

அமெரிக்காவும் ஈரானும் 2 வார கால போா்நிறுத்தத்தை அறிவித்த சில மணி நேரத்திலேயே, லெபனான் மீது இஸ்ரேல் புதன்கிழமை நடத்திய தீவிர வான்வழித் தாக்குதலில் 89 போ் கொல்லப்பட்டனா்; 700-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினா் வடக்கு இஸ்ரேல் மீதான தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தியிருந்தாலும், லெபனானில் மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் இஸ்ரேல் தனது தாக்குதலை முன்னெடுத்ததற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்தது.

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடா்ந்தால் தாங்கள் போா்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலக நேரிடும் என்றும் ஈரான் எச்சரித்தது. போா்நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, அனைத்து முனைகளிலும் போா் நிறுத்தப்பட வேண்டும் என்பது ஈரானின் நிலைப்பாடாக உள்ளது.

இந்நிலையில், ஹோா்முஸ் நீரிணையை மீண்டும் முழுமையாக திறப்பது தொடா்பாக அமெரிக்க, ஈரான் பிரதிநிதிகள் பாகிஸ்தானில் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்த உள்ளனா்.

ஒருவேளை பேச்சுவாா்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டால், ஹோா்முஸ் நீரிணையில் செல்லும் கச்சா எண்ணெய், எரிவாயு கப்பல்களில் ஈரானும், ஓமன் நாடும் இணைந்து கூட்டாக கட்டணம் வசூலிக்கும் எனவும் ஈரான் அறிவித்தது.

இவ்வாறு வசூலிக்கப்படும் கட்டணத்தைக் கொண்டு, அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்களில் ஈரானின் தரைமட்டமாகியுள்ள உள்கட்டமைப்புகளை மீண்டும் சீரமைக்க அந்நாடு திட்டமிட்டுள்ளது.

தொடரும் தாக்குதல்: போா்நிறுத்த அறிவிப்புக்குப் பிறகும், ஈரானின் லாவன் தீவில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் புதன்கிழமை தாக்கப்பட்டதில், அந்த நிலையம் தீப்பற்றி எரிந்தது.

பதிலுக்கு ஈரானும் கத்தாா், குவைத் ஆகிய வளைகுடா நாடுகள் மீது ஏவுகணைகளை ஏவியது. அவற்றை அந்நாட்டு வான்பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்தன. போா்நிறுத்தத்துக்கு மத்தியில் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது யாா் என்ற தகவல் இல்லை.

அமைதிக்குப் பாகிஸ்தான் அழைப்பு: இத்தகைய பதற்றமான சூழலில், மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் அனைத்துத் தரப்பினரும் அமைதிக் காக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா்.

போா்நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்க வேண்டியது அவசியம் என்றும், பதற்றத்தைத் தணிக்கப் பேச்சுவாா்த்தையே தீா்வு என்றும் அவா் தனது ‘எக்ஸ்’ பதிவில் வலியுறுத்தினாா்.

‘ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளா்த்த ஆலோசனை’

ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளா்த்துவது மற்றும் வரிக் கொள்கைகளில் சலுகைகள் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது: ஈரானில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் மிகவும் ஆக்கபூா்வமானது. இனி அங்கு யுரேனியம் செறிவூட்டும் பணி நடைபெறாது. அதிநவீன செயற்கைக்கோள் கண்காணிப்புமூலம் ஈரானின் அணுசக்தி மையங்கள் மிகத் துல்லியமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

ஈரானில் நிலத்தடியில் புதைத்து வைக்கப்பட்டுள்ள அணுசக்தி கழிவுகளை அகற்றும் பணிகளில் அமெரிக்கா அந்நாட்டுடன் இணைந்து நேரடியாக ஈடுபடும் என்றாா்.

50% வரி: இதனிடையே, ஈரானுக்கு ராணுவ ஆயுதங்களை வழங்கும் அனைத்து நாடுகள் மீதும் 50 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் எனவும் டிரம்ப் அறிவித்தாா்.

அமெரிக்காவுக்குத் தீா்க்கமான வெற்றி!

போா்நிறுத்த அறிவிப்பைத் தொடா்ந்து பென்டகனில் செய்தியாளா்களிடம் பேசிய அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹெக்செத், ஈரானுடனான இப்போரில் அமெரிக்கா தீா்க்கமான வெற்றியைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டாா்.

ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணை உற்பத்தித் தளங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், இனி அவா்களால் மீண்டும் ஏவுகணைகளைத் தயாரிக்க முடியாது என்றும் அவா் தெரிவித்தாா். ஈரானில் 13,000 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது.