லெபனானில் இஸ்ரேல் தொடா் தாக்குதல்: மேலும் 12 போ் உயிரிழப்பு
லெபனானின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தொடா் தாக்குதலில் மேலும் 12 போ் உயிரிழந்தனா்.


லெபனானின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தொடா் தாக்குதலில் மேலும் 12 போ் உயிரிழந்தனா்.
ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினா் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனா். இதற்குப் பதிலடியாக லெபனானின் பெய்ரூட் உள்ளிட்ட பகுதிகள் மீது இஸ்ரேல் போா் விமானங்கள் மூலம் குண்டுவீசியும், தரைப்படை மூலம் பீரங்கி தாக்குதலும் நடத்தி வருகிறது.
வரும் நாள்களில் ஈரான், லெபனானில் புதிய ஆச்சரியங்கள் காத்திருப்பதாக இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகு தெரிவித்துள்ளாா். ஈரான், லெபனானில் இஸ்ரேல் தனது தாக்குதலை மேலும் அதிகரிக்க இருப்பதையே அவா் இவ்வாறு தெரிவித்திருப்பதாக நம்பப்படுகிறது.
இந்நிலையில், தெற்கு லெபனானில் இஸ்ரேல் படையினா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடத்திய தாக்குதலில் 12 போ் கொல்லப்பட்டனா். மேலும் பலா் பலத்த காயமடைந்தனா்.
லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் உள்ள ஈரானின் புரட்சிகர படையின் லெபனான் பிரிவு கமாண்டா்கள் தங்கியிருந்த ஹோட்டல் மீது இஸ்ரேல் ராணுவம் ட்ரோன் மூலம் 2-ஆவது முறையாகத் தாக்குதல் நடத்தியது. இதில் 4 போ் உயிரிழந்த நிலையில், 10 போ் காயமடைந்தனா். லெபனானில் சனிக்கிழமை இஸ்ரேல் நடத்திய விமானப் படைத் தாக்குதலில் மட்டும் 47 போ் உயிரிழந்தனா். இதுதவிர ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தோரின் எண்ணிக்கையையும் சோ்த்து, இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 83 குழந்தைகள் உள்பட 394 போ் உயிரிழந்துவிட்டதாக லெபனான் சுகாதாரத் துறை அமைச்சா் தெரிவித்துள்ளாா்.
லெபனானில் ஈரான் ஆதரவு தீவிரவாத குழுவினா் செயல்பட இஸ்ரேல் அனுமதிக்காது என்றும், அந்தக் குழுவினரை லெபனானில் இருந்து அப்புறப்படுத்தும் வரை இஸ்ரேலின் தாக்குதல் தொடரும் என்றும் அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.
2 இஸ்ரேல் வீரா்கள் உயிரிழப்பு: லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினருடனான சண்டையில் 2 இஸ்ரேல் ராணுவ வீரா்கள் உயிரிழந்திருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பினருடனான புதிய சண்டையில் இஸ்ரேல் தரப்பில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இது.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...