திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி பாம்பாட்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணி தலைமையில் கண்காட்சி மற்றும் விதை திருவிழா நடைபெற்றது.
இவ்விழாவில், முகவனூர், தவளைவீரன்பட்டி, பழையக்கோட்டை உள்ளிட்ட ஊராட்சிகளிலிருந்து தொடக்கப்பள்ளி மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டு நாட்டு காளை, நாட்டு பசு, கீரை வகைகள், பயிறு வகைகள், தானிய வகைகள், காய்கறி வகைகள் ஆகியவற்றுக்கான அரங்குகளை அமைத்தனர்.
கண்காட்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் நவதானிய கூல் வழங்கப்பட்டது. கூல் குடித்த பின் அந்த கோப்பையில் சிறிதளவு மண் மற்றும் உரம் எடுக்கப்பட்டு அதில் விதைகள் வைக்கப்பட்டு அவை மரக்கன்றுகளாக மாற்ற அடித்தளம் அமைக்கப்படுகிறது.
விழாவில் கலந்துகொண்ட ஒவ்வொரு மாணவ மாணவியர்களின் பெற்றோர்களுக்கு ஆதார் அட்டை அடிப்படையில் வீட்டுக்கொரு மரக்கன்று மற்றும் முதல்வரின் கிராமப்புற வீட்டுக் காய்கறி உற்பத்தித் திட்டத்தில் பெற்றோர்களுக்கு காய்கறி விதைகள் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள், மாணவ மாணவியர், பெற்றோர்கள், இருபால் ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஊர்மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!

வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


