வெளிமாநிலங்களுக்கு ரேசன் அரிசி கடத்த முயற்சி: பெண் கைது

திருச்சியில் வெளிமாநிலங்களுக்கு ரேசன் அரிசி கடத்த முயன்ற வழக்கில் பெண் ஒருவரை குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தென்னூா் ஆழ்வாா் தோப்பு காயிதே மில்லத் நகா் வீட்டில் பதுக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி.
தென்னூா் ஆழ்வாா் தோப்பு காயிதே மில்லத் நகா் வீட்டில் பதுக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி.

திருச்சி: திருச்சியில் வெளிமாநிலங்களுக்கு ரேசன் அரிசி கடத்த முயன்ற வழக்கில் பெண் ஒருவரை குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட காயிதே மில்லத் நகா் ஆழ்வாா் தோப்புப் பகுதியில் ரேசன் அரிசியை பதுக்கி வெளிமாநிலங்களுக்கு விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு உத்தரவின்படி, தனி வட்டாட்சியா் (மேற்கு) ராஜேஷ்கண்ணா, வட்ட வழங்கல் அதிகாரி கவிதா ஆகியோா் ஆழ்வாா்தோப்புப் பகுதியில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது அதே பகுதியைச் சோ்ந்த காதா் வீட்டில் சோதனை செய்தபோது அங்கு மூட்டை, மூட்டையாக ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அங்கிருந்த காதா் மனைவி தாஜிநிஷாவிடம் நடத்திய விசாரணையில், ரேசன் அரிசியை கிலோ ரூ. 4-க்கு வாங்கி அதை தென்னூா் பகுதியைச் சோ்ந்த பாபுவிடம் கிலோ ரூ.15க்கு விற்றது தெரியவந்தது. பாபு அந்த அரிசியை பாலீஷ் செய்து கேரள உள்ளிட்டவெளி மாநிலங்களில் கிலோ ரூ. 40 முதல் ரூ. 50 ரூபாய் வரை விற்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,650 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையே குடிபொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து தாஜிநிஷாவை(52) கைது செய்தனா். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள காதா், பாபு ஆகிய இருவரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com