மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திருச்சியில் கரோனா வார்டில் சிகிச்சைப் பெற்ற மூதாட்டி பலி

திருச்சி அரசு மருத்துவமனை கரோனா வார்டில் சிகிச்சைப் பெற்று வந்த 70 வயது மூதாட்டி ஒருவர் செவ்வாய்க்கிழமை பலியானார்.

News image

கோப்புப்படம்

Updated On :2 ஜூன் 2020, 7:25 am

திருச்சி அரசு மருத்துவமனை கரோனா வார்டில் சிகிச்சைப் பெற்று வந்த 70 வயது மூதாட்டி ஒருவர் செவ்வாய்க்கிழமை பலியானார்.

திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்த அந்த முதாட்டி, கடந்த 29ஆம் தேதி கரோனா பாதிப்பு காரணமாக திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த இவருக்கு, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, இருதயகோளாறு ஆகியவையும் இருந்துள்ளது. மேலும், நுரையீரல் தொந்தரவும் அதிகரித்ததால் செவ்வாய்க்கிழமை பலியானார்.

இதுதொடர்பாக, மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் திருச்சி மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மூதாட்டியின் உடலை பாதுகாப்பாக அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் வழிகாட்டுதலின்படி, மூதாட்டியின் உடலை பாலக்கரை பகுதியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 88 பேர் கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்ததில் இதுவரை, 71 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்திலேயே முதன்முறையாக மூதாட்டி ஒருவர் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.