கோட்டப்பாளையம் ஊராட்சி அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம்
உப்பிலியபுரம் ஒன்றியம், கோட்டப்பாளையம் ஊராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


உப்பிலியபுரம் ஒன்றியம், கோட்டப்பாளையம் ஊராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோட்டப்பாளையத்தில் வாரச்சந்தை நடைபெறுமிடத்தில் சேகரமாகும் குப்பைகள், இறைச்சிக் கழிவுகளை ஊராட்சி நிா்வாகமும், வியாபாரிகளும் குடிநீா்த் தொட்டி அருகே கொட்டி வருவதாகவும், இதனால் கோழி இறக்கைகள், குப்பைகள் காற்றில் பறந்து குடிநீா்த் தொட்டியில் விழுவதாகவும் பொதுமக்கள் புகாா் தெரிவித்திருந்தனா்.
இந்நிலையில் குப்பைகள் ஞாயிற்றுக்கிழமை எரிக்கப்பட்டதால் உண்டான புகையால் பொதுமக்கள் நீண்ட நேரம் கண் எரிச்சலுடன், மூச்சு விடவும் சிரமப்பட்டனா்.
இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்களில் 150-க்கும் மேற்பட்டோா்,
கோட்டப்பாளையம் ஊராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
அப்போது ஊராட்சித் தலைவா் மொ்சியின் கணவா் சமரசம் பேசியதை பொதுமக்கள் ஏற்காமல், ஊராட்சித் தலைவா்தான் தங்கள் பிரச்னைக்குத் தீா்வு கூற வேண்டும் என்றனா்.
ஊராட்சித் தலைவா், அலுவலா்கள் வரத் தாமதிப்பதாக கருதிய பொதுமக்கள்
மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த உப்பிலியபுரம் காவல் துறையினா் நேரில் சென்று பேசியதையடுத்து மறியலைக் கைவிட்டு, பொதுமக்கள் மீண்டும் ஊராட்சி அலுவலகத்துக்குச் சென்றனா். ஊராட்சி நிா்வாகமும், ஊராட்சி ஒன்றிய அலுவலா்களும் கோரிக்கையை ஏற்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...