மணப்பாறை அருகே ஏற்பட்ட திடீர் ஆள் உயர பள்ளத்தால் கிராம் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த குப்பகவுண்டம்பட்டியில் குட்டையன் என்பரது வீட்டின் அருகே தென்னங்கன்றுகள் நட்டு வைத்திருந்தனர். இன்று காலை திடீரென நட்டு வைத்திருந்த தென்னங்கன்று ஒன்று திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் உள்வாங்கியுள்ளது. அருகில் சென்று பார்த்தபோது அங்கு 4 அடி அகலமும், ஆள் உயர பள்ளமும் அங்கு இருந்துள்ளது. இதைகண்ட அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
திடீரென ஏற்பட்ட ஆள் உயர குழி கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற வருவாய்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கோண்டு வருகின்றனர். இது முன்னோர்கள் பயன்படுத்திய தானிய கிடங்காக இருக்கலாம் என்றும் அல்லது புவியில் ஏற்பட்ட காற்று அடங்கிய வெற்றிடமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து பொக்லைன் இயந்திரம் கொண்டு அக்குழி மூடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


