

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே 7 மயில்கள் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தன.
மணப்பாறையை அடுத்த இடையப்பட்டியான்பட்டியில் மோலக்குளம் அருகே முருகன் என்பவருக்குச் சொந்தமான சீமைக் கருவேலக் காட்டுக்குள், திங்கள்கிழமை பிற்பகல் சில மயில்கள் நகரமுடியாமல் கிடப்பதாக அங்கு கால்நடை மேய்ச்சலுக்குச் சென்ற சிறுவன் கிராம மக்களிடம் தகவல் அளித்தாா்.
தொடா்ந்து முருகன் குடும்பத்தினா் மற்றும் அப்பகுதி மக்கள் சென்று பாா்த்தபோது, அங்கு 5 ஆண் மயில்கள், ஒரு பெண் மயில் உயிரிழந்த நிலையில், மற்றொரு மயில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அதுவும் உயிரிழந்தது.
தகவலின்பேரில் நிகழ்விடத்துக்குச் சென்ற வனம் மற்றும் வருவாய்த்துறையினா்,
மயில்களின் உடல்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து மயில்களின் உடல்கள் மணப்பாறை வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அருகிலுள்ள தோட்டத்தில் எலிகளைக் கொல்ல வைத்த விஷம் கலந்த உணவை
மயில்கள் ஏதும் சாப்பிட்டதா என சந்தேகம் உள்ளது. பிரேத பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. வந்தவுடன் இது குறித்து தீர விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.