திருச்சியில் திமுக சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 21st July 2020 12:13 PM | Last Updated : 21st July 2020 12:13 PM | அ+அ அ- |

மின் கட்டண உயர்வைக் கண்டித்து, திருச்சியில் திமுக சார்பில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் திமுக சார்பில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து இன்று கருப்புக்கொடி ஏந்தியும். வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருச்சி தில்லைநகரில் உள்ள திமுக அலுவலகத்தில் முதன்மை செயலாளர் கே.என். நேரு எம்எல்ஏ தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.
இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல மாவட்டத்தில் உள்ள திமுக நிர்வாகிகள் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி மின் கட்டண உயர்வு எதிர்ப்பு தெரிவித்தனர். தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம் எல் ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.