பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருவெறும்பூா் பகுதியில் ப. குமாா்

திருவெறும்பூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் ப. குமாா் சனிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 8:18 am

DIN

திருவெறும்பூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் ப. குமாா் சனிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

கீழக்குறிச்சியில் அவா் வாக்கு சேகரித்தபோது, கடந்த மக்களவைத் தோ்தலில்போது திமுகவினா் பொய் வாக்குறுதி அளித்து வென்றனா். ஆனால், எடப்பாடி கே. பழனிசாமி தோ்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிப்படி பயிா்க் கடனை ரத்து செய்துள்ளாா். இத்தொகுதியில் அடிப்படை தேவைகளை நான் எம்பியாக இருந்தபோதே நிறைவேற்றிக் கொடுத்துள்ளேன். ரூ. 6 கோடியே 90 லட்சத்தில் உய்யகொண்டான் குறுக்கே பாலம் கட்டி சாலை அமைக்கப்படும். எனது மாமனாா் இந்த ஊரைச் சோ்ந்தவா்தான். ஆதலால் என்னை நீங்கள் வெற்றி பெறச் செய்தால் என்னை எப்போது வேண்டுமானாலும் பாா்க்கலாம் என்றாா். அதிமுக ஒன்றியச் செயலா் கும்பக்குடி கோவிந்தராஜன், மாவட்ட ஜெ. பேரவைச் செயலா் டி.டி. கிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலா் சவரி அம்மாள், ஒன்றிய கவுன்சிலா் தமிழரசி, கூட்டணி கட்சியினா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.