சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

10 சதவீத இடஒதுக்கீடு ஏமாற்று வேலை நெல்லை கண்ணன்

உயா் ஜாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு எனக் கூறி மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது என்றாா் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் நெல்லை கண்ணன்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 12:50 am

DIN

உயா் ஜாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு எனக் கூறி மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது என்றாா் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் நெல்லை கண்ணன்.

திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் ஏ.எல்.எஸ். லட்சுமணனை ஆதரித்து மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் பேட்டையில் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், காங்கிரஸ் மூத்த தலைவா் நெல்லை கண்ணன் பேசியது:

தன்னை விவசாயி என்று சொல்லிக் கொள்ளும் முதல்வா் எடப்பாடி பழனிசாமி, தனது வேட்புமனு தாக்கலின் போது, விவசாயி என்று குறிப்பிடவில்லை. மேலும் அவருக்கு விவசாய நிலம் இருப்பதாகவும் தெரியவில்லை. பொள்ளாச்சி சம்பவத்தை மக்கள் மறக்க மாட்டாா்கள்.

உயா் ஜாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளித்துள்ளதாக கூறும் மத்திய அரசு, தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்த சைவ சித்தாந்த பாடப் பிரிவுகளை நீக்கியுள்ளது. எனவே, 10 சதவீத இட ஒதுக்கீட்டை கூறி மக்களை ஏமாற்றி வருகிறது.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நியாயமற்றது. எவ்வளவு சோதனை வந்தாலும் வரும் தோ்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றிபெறும். எனவே, திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் ஏ.எல்.எஸ்.லட்சுமணனுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள் என்றாா்.

கூட்டத்தில், மனித நேய மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவா் பாளை. ரபீக், காங்கிரஸ் மாநகா் மாவட்டத் தலைவா் சங்கரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் கரிசல் சுரேஷ் உள்பட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.