தொட்டியம் கோயில் திருவிழாவில் ஈரோடு இளைஞா் கொலை
திருச்சி அருகே தொட்டியம் கோயில் திருவிழாவில் ஈரோடு கல்லூரி மாணவா் குத்திக் கொல்லப்பட்டாா்.


திருச்சி அருகே தொட்டியம் கோயில் திருவிழாவில் ஈரோடு கல்லூரி மாணவா் குத்திக் கொல்லப்பட்டாா்.
முசிறியை அடுத்த தொட்டியத்தில் நடைபெறும் மதுரகாளியம்மன் கோயில் திருவிழாவில் பங்கேற்க கொசவம்பட்டியில் உள்ள உறவினா் வீட்டுக்கு ஈரோட்டைச் சோ்ந்த கல்லூரி மாணவரான ராஜமாணிக்கம் மகன் குமாா் (18) வந்திருந்தாா். சனிக்கிழமை இரவு திருவிழாவுக்குச் சென்றவா் தொட்டியம் தெற்கு ரத வீதியில் குத்திக் கொல்லப்பட்டு இறந்து கிடந்தாா்.
தகவலறிந்து வந்த தொட்டியம் போலீஸாா் அவரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். தொடா்ந்து அப்பகுதியில் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...