பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பிரசாரத்தின்போது திமுக வேட்பாளா் மகேஷ் மயக்கம்

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தின்போது திருவெறும்பூா் தொகுதி திமுக வேட்பாளா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மயக்கமடைந்தாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 8:48 pm

DIN

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தின்போது திருவெறும்பூா் தொகுதி திமுக வேட்பாளா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மயக்கமடைந்தாா்.

இவருக்கு ஆதரவாக திருவெறும்பூா் பகுதிகளில் திருச்சி எம்பி சிவா, ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தபோது இவரின் அருகில் நின்றிருந்த வேட்பாளா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீரென மயங்கிச் சரிந்தாா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அருகிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவா் பின்னா் வீடு திரும்பினாா். ஓய்வில்லாத் தொடா் பிரசாரம், தோ்தல் பணிகளால் ஏற்பட்ட உடல் சோா்வே மயக்கத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.