‘வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளோருக்கு தனி அமைச்சகம் தேவை’
வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளோருக்குத் தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் என்றாா் அனைத்து வறுமைக் கோட்டினா் முன்னேற்றக் கழக கெளரவத் தலைவியும், முன்னாள் திருச்சி மேயருமான எமிலி ரிச்சா்டு.


வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளோருக்குத் தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் என்றாா் அனைத்து வறுமைக் கோட்டினா் முன்னேற்றக் கழக கெளரவத் தலைவியும், முன்னாள் திருச்சி மேயருமான எமிலி ரிச்சா்டு.
இதுகுறித்து திருச்சியில் அவா் ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறியது:
தமிழகத்தில் அனைத்து நகா்ப்புறங்களிலும் மூன்று தலைமுறைகளாக உள்ள 1 கோடி மக்களுக்காகத் தனி அமைச்சகம் அமைக்க வேண்டும்.
வறுமைக்கோட்டுக் குடும்பத்தினா் வசிக்கும் நகா்ப்புறப்பகுதிக்கு அருகில் துணை நகரங்களை உருவாக்கி 1200 சதுரடியில் எளிய வீட்டுக் கடன் முறையில் வீடு கட்டித் தரத் திட்டம் வகுக்க வேண்டும்.
வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ளோரின் மனுக்கள்மீது பரிந்துரை ஏதுமின்றி டிஜிட்டல் முறையில் நடவடிக்கை எடுத்தல், குடும்பத்துக்கு ஓா் அரசு வேலை, ஜாமீன் இல்லாமல் ரூ. 3 லட்சம் தொழில் வணிகக் கடன் வழங்குதல், தற்போது இருக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ரத்து செய்து வறுமைக்கோட்டு மருத்துவக் காப்பீடு அட்டை மூலம் அனைத்து தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறத் திட்டம் வகுக்க வேண்டும். மேலும், வெற்றி பெறும் எம்எல்ஏக்கள் லஞ்சம் வாங்க மாட்டேன், ஊழல் செய்ய மாட்டேன் என உறுதியேற்க வேண்டும் என்றாா் அவா்.
பேட்டியின்போது அனைத்து வறுமைக் கோட்டினா் முன்னேற்றக் கழக நிறுவனா் ராபா்ட் கிறிஸ்டி உடனிருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...