பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

திருவெறும்பூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா: ரூ. 18 ஆயிரம் பறிமுதல் 

திருவெறும்பூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்த அதிமுகவைச் சேர்ந்த இருவரிடமிருந்து ரூ.18, 500 பறிமுதல் செய்துள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :5 ஏப்ரல் 2021, 9:07 am

DIN

திருவெறும்பூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்த அதிமுகவைச் சேர்ந்த இருவரிடமிருந்து ரூ.18, 500 பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் சட்டப்பேரவைத் தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து அரசியல் கட்சியினர் வாக்காளர்களை கவரும் விதத்தில் பரிசுப் பொருள்கள், மற்றும் ரொக்கம் உள்ளிட்டவைகளை விநியோகித்து வருகின்றனர்.

அதனை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் இரவு பகலாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

ரொக்கம் மற்றும் பரிசுப்பொருட்களை வழங்குபவர்கள் பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்வதுடன் அவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திருவெறும்பூர் தொகுதியிலும் பல்வேறு அரசியல்  கட்சியினர் ரொக்கம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. 

இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலை  திருவெறும்பூர் பர்மா காலனி பகுதியில், தேர்தல் பறக்கும் படை அதிகாரி மலர்கொடி தலைமையிலான குழுவினர் தகவலின் பேரில் மேற்கொண்ட சோதனையில், அங்கு அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்தது தெரியவந்தது. 

இதனையடுத்து, திருவெறும்பூர் பர்மா காலனியை சேர்ந்த சுவாமிநாதன் (60) பாஸ்கர் (42) ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததும், அவர்களிடம் ரூ. 18,500 ரொக்கம் இருந்ததும் தெரியவந்தது. 

இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசாரிடம் புகார் செய்தனர். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.