ஸ்ரீரங்கத்திலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பும் பணிகளை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி திங்கள்கிழமை  தொடங்கி வைத்தார்.
ஸ்ரீரங்கத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்.
ஸ்ரீரங்கத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்.

ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பும் பணிகளை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி திங்கள்கிழமை  தொடங்கி வைத்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதி உள்பட 9  தொகுதிகளில் வாக்குப்பதிவு ஏப்.6 ஆம் தேதி  வாக்குப்பதிவு நடைபெற உள்ளது‌. 

இந்நிலையில், ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் (உதவி தேர்தல் நடத்தும் அலுவலகம்) இருப்பு வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள், கரோனா தடுப்பு பொருள்கள், வாக்குச்சாவடிக்கு தேவையான உபகரணங்கள் உள்ளிட்டவை திங்கள்கிழமை காலை முதல் அந்தந்த வாக்குச்சாவடிக்கு அனுப்பி வைக்கும் பணியை ஆட்சியர் திவ்யதர்ஷினி ஸ்ரீரங்கம் தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்பு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் பாதுகாப்பாக உரிய வாக்குச்சாவடி மையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணியை தொடங்கி வைத்தார். 

இதையும் படிக்கலாமே.. தலைவர்கள் ஒரு பார்வை...

அதுபோல் இதர தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.

இதை தொடர்ந்து, ஸ்ரீரங்கம் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மகேந்திரன் தொகுதியில் உள்ள 440 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com