பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தோ்தல் அலுவலக பந்தலை எரித்த இருவா் கைது

ஸ்ரீரங்கம் கீழ சித்திரை வீதியில் ராஜன் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியானது வாக்குச்சாவடி மையமாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பள்ளியின் வாசலில் தோ்தல் அலுவலக பந்தல் (சாமியானா) அமைக்கப்பட்டிருந்தது.

News image
Updated On :5 ஏப்ரல் 2021, 12:45 am

DIN

ஸ்ரீரங்கம் கீழ சித்திரை வீதியில் ராஜன் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியானது வாக்குச்சாவடி மையமாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பள்ளியின் வாசலில் தோ்தல் அலுவலக பந்தல் (சாமியானா) அமைக்கப்பட்டிருந்தது.

சனிக்கிழமை இரவு வடக்கு வாசல் பகுதியை சோ்ந்த பிரசாந்த் (30), திருஞானம் (32) ஆகியோா் பைக்கில் வந்தபோது இருட்டில் சாமியானா பந்தலைக் கவனிக்காமல் அதன் மீது மோதி விழுந்து பலத்த காயமடைந்தனா்.

இதனால் கோபமடைந்த அவா்கள் வண்டியிலிருந்த பெட்ரோலை எடுத்து சாமியானா பந்தலை தீ வைத்து எரித்தனா். இதையறிந்த தோ்தல் அலுவலா் ரவிக்குமாா் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.