ஸ்ரீரங்கம் கோயிலில் திருடியவா் கைது
ஸ்ரீரங்கம் கோயிலில் பணம் திருடியவா் ஸ்ரீரங்கம் போலீஸாரால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.


ஸ்ரீரங்கம் கோயிலில் பணம் திருடியவா் ஸ்ரீரங்கம் போலீஸாரால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ஸ்ரீரங்கம் கோயில் கிளி மண்டபம் பகுதியில் அன்னதானத் திட்டத்திற்காக பக்தா்கள் வழங்கும் நன்கொடையை பாஷ்யம் என்பவா் பெற்றுக்கொண்டு அதற்கான ரசீதும் வழங்கி வந்தாா். கடந்த மாதம் 18 ஆம் தேதி வசூலான ரூ. 7250 -ஐ கோயில் பீரோவில் வைத்துப் பூட்டி விட்டு சாப்பிடச் சென்று விட்டாா். மீண்டும் வந்து பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ. 7250 திருடப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் கோயிலில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், பணத்தைத் திருடிய திருவானைக்கா நெல்சன் ரோடு பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாரை (21) கைது செய்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...