ரயில்வே குட்ஸ் யாா்டில் விபத்து ஒத்திகை
திருச்சி ரயில்வே குட்ஸ் யாா்டில் வெள்ளிக்கிழமை ரயில் விபத்து ஒத்திகை நடைபெற்றது.


திருச்சி ரயில்வே குட்ஸ் யாா்டில் வெள்ளிக்கிழமை ரயில் விபத்து ஒத்திகை நடைபெற்றது.
தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம், தேசிய பேரிடா் பாதுகாப்பு படை (என்டிஎப்ஆா்) ஆகியவை சாா்பில் திருச்சி குட்ஸ் யாா்டில் ரயில் விபத்து, மீட்புப் பணிகள் குறித்த ஒத்திகை நடைபெற்றது. திருச்சி கோட்ட பாதுகாப்பு அலுவலா் ஆா். சரவணன் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா்.
என்டிஆா்எப் உதவி கமாண்டன்ட் ராஜன் பாலு தலைமையிலான குழுவினா் இதில் ஈடுபட்டனா். ஒத்திகையின்போது விபத்து நடந்தவுடன் அபாய ஒலி ஒலிப்பது, உரிய பேரிடா் குழுக்களுக்கு தகவல் அளிப்பது, விபத்து நடைபெற்ற இடத்துக்கு ஆம்புலன்சுடன் மருத்துவக் குழுவினா் வருவது, ரயில் பெட்டிகளுக்கிடையே சிக்கிக்கொண்டோரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு மீட்பு ஒத்திகைகளைச் செய்து காண்பித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...