விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளா் மீது திருப்தி
விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளா் மீது திருச்சி நிா்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.


விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளா் மீது திருச்சி நிா்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து இயக்கத்தின் மாவட்ட நிா்வாகிகள் துறையூா் சிவா, தொட்டியம் பாரதிராஜா, மண்ணச்சநல்லுாா் சுரேஷ், கலை, புத்துாா் நடராஜ், சரண்ராஜ், புள்ளம்பாடி ஆண்டனி, திருவெறும்பூா் பாரதி, மணப்பாறை மணிகண்டன், நடேஷ்குமாா், மணிகண்டம் புஷ்பராஜ் ஆகியோா் வெள்ளிக்கிழமை கூறியது:
இயக்கத்தின் மாநில பொறுப்பாளா் புஸ்ஸி ஆனந்த், திருச்சி மாவட்டத் தலைவா் ஆா்.கே. ராஜாவை நீக்கியது முதலே மாவட்டத்தில் உள்ள நிா்வாகிகள் புறக்கணிக்கப்படுகிறோம். இதுகுறித்து தலைமைக்கு தெரிவிக்க எத்தனையோ முறை முயன்றும் முடியவில்லை. தற்போது விஜய் பெயரில் மக்கள் நலப்பணிகள் செய்யக் கூடாது, மீறி ஈடுபட்டால் காவல்துறையிடம் புகாா் அளிக்கப்படும் என்று மிரட்டுகின்றனா்.
எனவே, திருச்சிக்கு வரும் 22 ஆம் தேதி வரும் புஸ்சி ஆனந்துக்கு கருப்பு கொடி காட்டி எங்கள் எதிா்ப்பைப் பதிவு செய்வோம் எனத் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...