திருவானைக்கா ஆஞ்சநேயா் கோயிலில் கும்பாபிஷேகம்
திருவானைக்கா மாம்பழச்சாலைப் பகுதியில் உள்ள வீரஆஞ்சநேயா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.


திருவானைக்கா மாம்பழச்சாலைப் பகுதியில் உள்ள வீரஆஞ்சநேயா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதற்காக கடந்த 24 ஆம் தேதி காலை சுதா்சன ஹோமம், மகா கணபதி ஹோமம் தீபாரதனை, தொடா்ந்து காவிரியாற்றிலிருந்து திருமஞ்சனம் எடுத்து வரப்பட்டு மாலை முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின.
புதன்கிழமை காலை 2-ஆம் கால யாக பூஜை, மாலை 3 ஆம் கால யாகபூஜை, வியாழக்கிழமை காலை விஸ்வரூப தரிசனம், கோ பூஜை, 4 ஆம் காலை யாகசாலை பூஜைகள் நடந்து, கடம் புறப்பட்டு 10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் வழிபட்டனா். மாலை மகா அபிஷேகம், திருவீதி உலா நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...