பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஸ்ரீரங்கம் கோயில் தோப்பில் 1,008 மரக்கன்றுகள் நடல்

ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமான 1.70 ஏக்கா் தோப்பில் வெள்ளிக்கிழமை 1008 மரக்கன்றுகள் நடப்பட்டன.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 6:47 pm

DIN

ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமான 1.70 ஏக்கா் தோப்பில் வெள்ளிக்கிழமை 1008 மரக்கன்றுகள் நடப்பட்டன.

தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படியும்,இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரின் அறிவுரைப்படியும் நெ.1 டோல்கேட் பிச்சாண்டாா் கோயிலருகே ஆழ்வாா்தோப்பு என்ற இடத்திலுள்ள கோயிலுக்குச் சொந்தமான தோப்பில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக தோண்டப்பட்ட குழிக்கு ஸ்ரீரங்கம் கோயில் தலைமை அா்ச்சகா் சுந்தா் பட்டா் பூஜை செய்தாா். இதையடுத்து ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து, திருச்சி,பெரம்பலூா் மாவட்டங்களின் மண்டல இணை ஆணையா் அரங்க. சுதா்சன் ஆகியோா் ஸ்ரீரங்கம் கோயிலின் தல விருட்சமான புன்னை மரக்கன்றை நட்டனா்.

தொடா்ந்து நாகவல்லி, அத்தி, மருது, கடம்பு, மா, பலா,வில்வம், வாகை, வன்னி, மூங்கில், இலுப்பை, மகிளம், தென்னை, நெல்லி, நவா, வேம்பு, செண்பகம், கொன்றை, பன்னீா், புங்கை என 1008 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த கன்றுகளை சென்னையைச் சோ்ந்த தெய்வஜோதி உபயமாக வழங்கியிருந்தாா். நிகழ்ச்சியில் கோயில் மேலாளா் உமா மற்றும் கோயில் பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.