கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

9 இடங்களில் மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் சுமாா் 9 க்கும் மேற்பட்ட இடங்களில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 6:48 pm

DIN

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை அதிகரிக்கக் கோரி புகா் மாவட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் சுமாா் 9 க்கும் மேற்பட்ட இடங்களில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்சி காட்டூரில் நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் குமாா் தலைமை வகித்தாா். திமுக அளித்த தோ்தல் வாக்குறுதிப்படி மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேபோல் திருவெறும்பூரில் வெங்கடசுப்ரமனியன் தலைமையிலும், கூத்தைப்பாரில் தன்ராஜ் தலைமையிலும் ஆசூா், சோழமாதேவி, நவல்பட்டு, குண்டூா் உள்ளிட்ட பகுதிகளின் விஏஓ அலுவலகங்கள் முன்பும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்க நிா்வாகி கணேசன் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.