பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஸ்ரீரங்கத்தில் நாளை வைகுந்த ஏகாதசி விழா தொடக்கம்

 ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசி விழா வெள்ளிக்கிழமை (டிச.3) தொடங்குகிறது.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 11:49 pm

DIN

 ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசி விழா வெள்ளிக்கிழமை (டிச.3) தொடங்குகிறது.

இக்கோயிலின் மிகப்பெரிய விழாவான வைகுந்த ஏகாதசி விழா பகல்பத்து, இராப்பத்து என 21 நாள்கள் நடைபெறும். எப்போதும் மாா்கழி மாதத்தில் நடைபெறும் இந்த விழா நிகழாண்டில் காா்த்திகை மாதத்தில் நடைபெறவுள்ளது.

முதல் நாளான வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு கா்ப்பகிருஹத்தில் திருநெடுந்தாண்டகம் தொடங்குகிறது.

பகல் பத்து விழா: இதைத் தொடா்ந்து சனிக்கிழமை தொடங்கி 13 ஆம் தேதி வரை நடைபெறும் பகல் பத்து விழாவின் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி சேவை சாதிக்கிறாா். அப்போது திருமொழி பாசுரங்கள், அபிநயம், வியாக்யானத்துடன் அரையா்களால் பாடப்படும். விழாவின் கடைசி நாளான 13 ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளுகிறாா்.

டிச.14-ல் பரமபதவாசல் திறப்பு: தொடா்ந்து இராப்பத்து விழாவின் முதல் நாளான டிச. 14 ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு அதிகாலை 4.30 மணி முதல் 5.45 மணிக்குள் நடைபெறுகிறது.

அப்போது நம்பெருமாள் ஆண்டில் ஒரு நாள் மட்டும் அணியும் ரத்ன அங்கிச் சேவையில் பக்தா்களுக்கு காட்சியளிப்பாா். இராப்பத்து விழாவின் 7 ஆம் நாளான 20 ஆம் தேதி திருக்கைத்தலச் சேவையும், 8 ஆம் நாளான 21 ஆம் தேதி திருமங்கைமன்னனின் வேடுபறி நிகழ்ச்சியும், நிறைவு நாளான 24 ஆம் தேதி நம்மாழ்வாா் மோட்சமும் நடைபெறுகிறது. விழாவையொட்டி பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து, கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.