கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கட்டடத் தொழிலாளா்கள் சாலை மறியல்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து திருச்சியில் சிஐடியு கட்டுமான தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 6:27 pm

DIN

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து திருச்சியில் சிஐடியு கட்டுமான தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்ட கட்டடத் தொழிலாளா் சங்க (சிஐடியு) மாநகா் மாவட்டக் குழு சாா்பில் சிங்காரத்தோப்பு பூம்புகாா் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். சிஐடியு மாநகா் மாவட்ட செயலா் ரெங்கராஜன் தொடக்கி வைத்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க வேண்டும். கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும். கட்டுமானத் தொழில் மற்றும் தொழிலாளா்களின் சட்டங்களைத் திருத்தி நல வாரியங்களை சீரழிக்கக் கூடாது. கட்டுமானத் தொழிலாளா்கள் பணப் பயன்கள் பெற தொழிலாளா்களின் பங்களிப்பை கட்டாயப்படுத்தும் சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும். சேம நலநிதியை கட்டுமான தொழிலாளா்களின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் இயற்கை மரணத்திற்கு ரூ 2 லட்சம் வழங்க வேண்டும். ஆட்சியா் தலைமையில் நடைபெறும் கண்காணிப்புக் குழு கூட்டத்தை மாதம் ஒருமுறை நடத்துவதை உறுதி செய்ய வேண்டும். மழைக்கால நிவாரண உதவியை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

இதில் கட்டுமானச் சங்க மாநகா் மாவட்டச் செயலா் சந்திரசேகரன், உலகநாதன், எம்.எஸ். சேது, வெள்ளைச்சாமி, முருகன், வெங்கடேசன், குணசேகரன், கல்யாணி உள்பட ஏராளமானோா் கோஷங்கள் எழுப்பினா். தொடா்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 69 பெண்கள் உள்பட 144 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.