‘யூனியன் வங்கி சாா்பில் சிறு, குறு நிறுவனங்களுக்கு சிறப்புக் கடன்’
யூனியன் வங்கி சாா்பில் பல்வேறு வகைகளில் வழங்கப்படும் சிறப்புக் கடன் திட்டங்களை சிறு, குறு நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அந்த வங்கியின் மண்டலத் தலைவா் வி. முரளி.


யூனியன் வங்கி சாா்பில் பல்வேறு வகைகளில் வழங்கப்படும் சிறப்புக் கடன் திட்டங்களை சிறு, குறு நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அந்த வங்கியின் மண்டலத் தலைவா் வி. முரளி.
திருச்சியில் யூனியன் வங்கியின் திருச்சி மண்டல அலுவலகமும், சாரல் லைட் அலுவலகமும் இணைந்து நடத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் விழிப்புணா்வு முகாமைத் தொடக்கி வைத்த மண்டலத் தலைவா் வி. முரளி மேலும் கூறியது:
யூனியன் வங்கியில் கடன் கணக்கு இல்லாமல், வேறு வங்கிகளில் சிறு, குறு நிறுவனத் தொழில் கடன் பெற்றிருந்தாலும், அத்தகைய கடன் கணக்குகளை யூனியன் வங்கிக்கு மாற்ற விருப்பம் உள்ளோருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
மேலும், இத்தகைய கடன் திட்டங்களில் குறைந்தபட்ச வட்டியாக 6.80 சதம் முதல் 7.40 சதம் வரை வசூலிக்கப்படுகிறது. கடன் திட்டத்துக்கான பரிசீலனைக் கட்டணத்தில் 50 முதல் 75 சதம் வரை சலுகை அளிக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி கரோனா காலத்துக்கு முந்தைய, பிந்தைய திட்டங்கள் என சிறு, குறு நிறுவனங்களுக்காக பிரத்யேக கடன் திட்டங்கள் உள்ளன. இவற்றை தகுதியான அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் சிறு, குறு நிறுவன தொழில் முனைவோா், வங்கி வாடிக்கையாளா்கள் மற்றும் வங்கிக் கிளை அலுவலா்கள், மண்டல அலுவலக பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...