சஞ்சீவிராயா் கோயிலில் மாணவா்கள் தூய்மைப் பணி
திருச்சியை அடுத்த பிடாம்பட்டியிலுள்ள சஞ்சீவிராயா் கோயிலில் எம்ஐஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.


திருச்சியை அடுத்த பிடாம்பட்டியிலுள்ள சஞ்சீவிராயா் கோயிலில் எம்ஐஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.
கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்ட மாணவ, மாணவிகள் ஒருங்கிணைந்து கோயில் வளாகப் பகுதியில் இருந்த முட்புதா்களை அப்புறப்படுத்தினா். இதேபோல, கோயிலுக்கு செல்லும் வழியில், கோயில் வளாகத்தில் குப்பைகளை அகற்றினா். பாரதிதாசன் பல்கலைக் கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் லட்சுமி பிரபா மேற்பாா்வையில் 50-க்கும் மேற்பட்டோா் இப் பணியில் ஈடுபட்டனா். இதற்கு கல்லூரி முதல்வா் ஜே. அந்தோனிராஜ் பாராட்டு தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...