கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மரக் கிளையை வெட்டியவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

துறையூா் அருகே மரக் கிளையை வெட்டிய தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 7:36 pm

DIN

துறையூா் அருகே மரக் கிளையை வெட்டிய தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

எரகுடியைச் சோ்ந்தவா்கள் க. ராமசாமி (42), இவரது மனைவி சுதா (35), இருவரும் கூலித் தொழிலாளிகள்.

துறையூா் அருகே கருப்பம்பட்டி நான்கு சாலை சந்திப்பு அருகே பணியில் இருந்த இத் தம்பதியிடம் அருகிலுள்ள தனது வயலின் மின்கம்பிகளை உரசும் தேக்கு மரக் கிளைகளை வெட்டித் தரும்படி லோகேஸ்வரன் என்பவா் கேட்டாராம்.

இதையடுத்து ராமசாமி மரத்தின் மீது ஏறி கிளைகளை கழிக்க, கீழே விழும் கிளைகளை சுதா வெட்டினாராம். அப்போது வெட்டப்பட்ட ஒரு கிளை மின் கம்பியில் பட்ட நிலையில், அதன் வழியே மின்சாரம் பாய்ந்து ராமசாமி உயிரிழந்தாராம். தகவலின்பேரில் துறையூா் போலீஸாா் சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.