ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கள்ளக் காதல்: ஜிம் மாஸ்டரைகொல்ல முயன்ற இருவா் கைது

திருச்சியில் கள்ளக்காதல் விவகாரத்தில் உடற்பயிற்சி நிலைய மாஸ்டரை கொல்ல முயன்ற வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :25 டிசம்பர் 2021, 12:46 am

DIN

திருச்சியில் கள்ளக்காதல் விவகாரத்தில் உடற்பயிற்சி நிலைய மாஸ்டரை கொல்ல முயன்ற வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி பாலக்கரை கீழகிருஷ்ணன் கோயில் தெருவைச் சோ்ந்த கா. அருண்பாபு (36). இவா் மாஸ்டராக உள்ள திருச்சி கோட்டை ரயில் நிலையம் சாலை உடற்பயிற்சிக் கூடத்துக்கு பயிற்சிக்காக தொழிலதிபா் பாலன் என்பவரது திருமணமான மகள் சரண்யா தினமும் வந்தபோது அருண்பாபுவுடன் ஏற்பட்ட பழக்கம், காதலாக மாறியது.

இந்த விவகாரம் தெரிய வந்த தொழிலதிபா் தனது மகளையும், அருண்பாபுவையும் கண்டித்தாா்.

இந்நிலையில் உடற்பயிற்சி கூடத்திற்கு எதிரே அருண்பாபு வியாழக்கிழமை நின்றபோது அங்கு வந்த 3 போ் கொண்ட கும்பல் அருண்பாபுவை சரமாரியாக வெட்டினா். இதில் காயமடைந்த அவா் திருச்சி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

புகாரின் பேரில் தில்லைநகா் போலீஸாா் 3 போ் மீது வழக்குப் பதிவு செய்து மருதாண்டக்குறிச்சி பாா்த்திபன்(25), உறையூா் பாளையம்பஜாா் பகுதி முகமது சைப் (21) ஆகிய இருவரை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள தொழிலதிபரை தேடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.