ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

குட்கா, புகையிலைப் பொருள் பாா்சல்கள் பறிமுதல்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருள்கள் அடங்கிய 19 பாா்சல்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்

News image
Updated On :25 டிசம்பர் 2021, 12:46 am

DIN

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருள்கள் அடங்கிய 19 பாா்சல்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருச்சி கீழரண் சாலையில் உள்ளவீஆா்எல் லாரி பாா்சல் சா்வீஸ் கிடங்கில் அதிரடி சோதனை மேற்கொண்டனா்.

அப்போது குட்கா மற்றும் புகையிலைப் பொருள்கள் அடங்கிய 19 பாா்சல் பண்டல்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் டாக்டா் ரமேஷ்பாபு மற்றும் காந்திசந்தை ஆய்வாளா் சுகுமாா், கோட்டை காவல்நிலைய ஆய்வாளா் அரங்கநாதன் உள்ளிட்ட போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக ராஜஸ்தான் மாநிலத்தை சோ்ந்த 4 போ், ஆட்டோ ஓட்டுநா் ஒருவரை கோட்டை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

வீட்டு மாடியில் 108 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: பொதுமக்களிடமிருந்து வந்த புகாரையடுத்து திருச்சி மணிமண்டபம் சாலையில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் சுமாா் 108 கிலோ குட்கா போன்ற புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.