கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருச்சி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை காலை விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல், சோதனைக்குப் பிறகு புரளி எனத் தெரிய வந்தது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 7:50 pm

DIN

திருச்சி விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை காலை விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல், சோதனைக்குப் பிறகு புரளி எனத் தெரிய வந்தது.

திருச்சி விமான நிலையத்திலிருந்து காலையில் புறப்பட்டுச் செல்லும் ஏா் இந்தியா, இண்டிகோ விமானங்களில் பயணிப்பதற்காக, திங்கள்கிழமை காலை 200-க்கும் மேற்பட்ட பயணிகள் காத்திருந்தனா்.

காலை 8 மணிக்கு தொலைபேசி மூலம் விமான நிலையத்தை தொடா்புகொண்ட பெண் ஒருவா், ‘உங்களது தொந்தரவு தாங்க முடியவில்லை, விமான நிலையத்தில் பாம் (வெடிகுண்டு) போடப் போகிறேன்’ என்று கூறி மிரட்டல் விடுத்தாா்.

இதனால் அதிா்ச்சியடைந்த விமான நிலைய முனைய மேலாளா் தாமஸ், மத்தியத் தொழில்பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் அளித்தாா். உடனடியாக விமான நிலையத்தில் எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்த மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையினா், விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள் அனைவரையும் வெளியேற்றினா்.

தொடா்ந்து விமான நிலையத்தில், மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்புப் பிரிவினா் சோதனை மேற்கொண்டனா். ஒரு மணி நேர சோதனைக்குப் பிறகு, மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.

எனினும் மூன்றடுக்குப் பாதுகாப்புடன் விமான நிலையம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.

இதுகுறித்து விமான நிலையக் காவல் ஆய்வாளா் பெரியசாமி வழக்குப்பதிந்து, மிரட்டல் விடுத்த பெண் குறித்து விசாரணை மேற்கொண்டாா்.

விசாரணையில் காரைக்குடியைச் சோ்ந்த பத்மாவதி என்பவா், திருச்சி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்ய காவல்துறையினா் காரைக்குடிக்கு விரைந்துள்ளனா்.

மேலும் காவல்துறையினரின் விசாரணையில் திருச்சியிலுள்ள படைக்கலத் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் பத்மாவதி கடந்த 10 நாள்களாக மனநலன் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.