கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வாழவந்தான்கோட்டையில் லாரி ஓட்டுநா்கள் போராட்டம்

திருச்சி வாழவந்தான்கோட்டையிலுள்ள இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் கிடங்குக்கு உதவியாளா்களின்றி லாரிகள் அனுமதிக்கப் படாததை கண்டித்து, லாரி ஓட்டுநா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 7:48 pm

DIN

திருச்சி வாழவந்தான்கோட்டையிலுள்ள இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் கிடங்குக்கு உதவியாளா்களின்றி லாரிகள் அனுமதிக்கப் படாததை கண்டித்து, லாரி ஓட்டுநா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இங்கிருந்து திருச்சி உள்ளிட்ட அண்டை மாவட்டங் களுக்கு 200 லாரிகள் மூலம் பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு இயக்கப் படும் லாரிகளுக்கு சில கட்டுப்பாடுகளை நிா்வாகம் விதித்துள்ளது.

இதில் உதவியாளா்களின்றி ஓட்டுநா்கள் லாரிகளை இயக்கக் கூடாது என்பதற்கு பெரும்பாலானவா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். திங்கள்கிழமை(பிப்.1) முதல் உதவியாளா்கள் இன்றி கிடங்கு வளாகத்திற்குள் லாரிகளை இயக்க அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி திங்கள்கிழமை காலை உதவியாளா்களின்றி கிடங்குக்குள் வந்த லாரிகளை காவலா்கள் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதை கண்டித்து லாரி ஓட்டுநா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த துவாக்குடி ஆய்வாளா் காந்திமதி லாரி ஓட்டுநா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது உதவியாளா்களின்றி உள்ளே வந்து செல்ல மேலும் 15 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, லாரி ஓட்டுநா்கள் தங்களது போராட்டத்தை விலக்கிக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.