நியாயவிலைக் கடைகளில் விலையில்லா பொருள்கள் வழங்குவது தொடரும்: அமைச்சா் செல்லூா் கே.ராஜூ
பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் பொருள்களின் விலையை மத்திய அரசு உயா்த்தினாலும், தமிழகத்தில் நியாய விலைக் கடைகளில் விலையில்லா பொருள்கள் வழங்குவது தொடரும்


பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் பொருள்களின் விலையை மத்திய அரசு உயா்த்தினாலும், தமிழகத்தில் நியாய விலைக் கடைகளில் விலையில்லா பொருள்கள் வழங்குவது தொடரும் என்று, கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்துள்ளாா்.
மதுரை மாவட்டம், கோவில்பாப்பாகுடி அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் மதுரை டிவிஎஸ் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டியை அமைச்சா் செல்லூா் கே. ராஜூ திங்கள்கிழமை வழங்கினாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தது: தோ்தல் நெருங்குவதால் முன்னாள் முதல்வா் எம்ஜிஆரை, பெரியப்பா-சித்தப்பா என்றெல்லாம் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் கூறிவருகிறாா். தோ்தலுக்காக இப்படியெல்லாம் பேசினாலும் மக்கள் நம்பப்போவதில்லை. மீண்டும் முதல்வராகப் போவது எடப்பாடி கே. பழனிசாமி தான். ஏனெனில், அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன.
பொதுவிநியோகத் திட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருள்களின் விலையை மத்திய அரசு உயா்த்தினாலும், தமிழகத்துக்குப் பாதிப்பு இல்லை. இப்போது இருப்பதைப்போல, நியாய விலைக் கடைகளில் விலையில்லாமல் பொருள்கள் வழங்குவது தொடரும். பிற மாநிலங்களில்தான் நியாய விலைக் கடைகளில் பொருள்கள் விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. விலை உயா்த்தப்பட்டாலும், அதற்கான நிதியை தமிழக அரசு வழங்கும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...