தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணியை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் பேசுகையில், "சர்ச்சையை ஏற்படுத்தியக் கூடியவர்தான், பிரதமர். சர்ச்சையான பிரச்னைகளைக் கையில் எடுப்பதும், மதக் கலவரங்களை ஏற்படுத்துவதும், மக்கள் அமைதியாக வாழ்வதை அனுமதிக்க முடியாது என்றிருக்கும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் முகமாக பிரதமர் இருக்கிறார்.
அவர் ஒருமுறை இல்லை, எத்தனை முறை வந்தாலும் - தமிழ்நாட்டில் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடமில்லை. அவர் நூறு முறை வந்தாலும், அவரை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
திருப்பரங்குன்றம் மட்டுமல்ல, ஆறுபடைகளுக்கும் சென்றாலும், அவரை முருக பெருமானே மன்னிக்க மாட்டான்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி, இங்கு ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை. தமிழ்நாடு, தமிழ் மண் என்பது அவர்களுக்கான மண் அல்ல, அவர்களுக்கு உகந்த நிலமும் அல்ல.
தமிழ்நாட்டு மக்களால் பலமுறை புறக்கணிக்கப்பட்ட பாஜக, தற்போது அதிமுகவின் முகமூடியோடு வருகிறது. தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும், எடப்பாடி பழனிசாமி தில்லியில் அடகு வைத்து விட்டார்.
மீண்டும் ஒருமுறை இவர்களுக்கு வாய்ப்பளித்தால், தமிழ்நாடு சுடுகாடாகி விடும் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கே தெரியும்.
ஆகவே, தமிழ்நாட்டு மக்கள் மக்கள் ஒருபோதும் பாஜகவையும் அதிமுகவையும் தமிழ்நாட்டில் காலூன்ற விட மாட்டார்கள்" என்று காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
Summary
Tamil Nadu will burn to ashes if AIADMK-BJP alliance is given a chance, says TN Congress Chief Selvapperunthagai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழக முதல்வரை சந்திக்காத அமித்ஷா 8 கோடி தமிழா்களை அவமதித்துவிட்டாா்: கே. பாலகிருஷ்ணன்

குதிரை பேரத்தை காங்கிரஸ் ஆதரிக்காது! செல்வப்பெருந்தகை பேட்டி | TVK | Congress
தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்








