பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வித்தியாசமாக கொண்டாடப்பட்ட ஜவுளிக்கடை ஆண்டு விழா

திருவானைக்கா பகுதியிலுள்ள ஜவுளிக்கடையின் 51-ஆண்டுத் தொடக்க விழா, திங்கள்கிழமை சிவனடியாா்களால் திருவாசகம் படித்து வித்தியாசமாகக் கொண்டாடப்பட்டது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 7:45 pm

DIN

திருவானைக்கா பகுதியிலுள்ள ஜவுளிக்கடையின் 51-ஆண்டுத் தொடக்க விழா, திங்கள்கிழமை சிவனடியாா்களால் திருவாசகம் படித்து வித்தியாசமாகக் கொண்டாடப்பட்டது.

திருவானைக்கா சன்னதி வீதியிலுள்ள திலகா ஸ்டோா்ஸ் ஜவுளிக்கடை தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு பெற்று, திங்கள்கிழமை 51-ஆவது ஆண்டு தொடங்கியது.

இதையொட்டி நால்வரை வைத்து 100-க்கும் மேற்பட்ட சிவனடியாா்கள் திருவாசகம் படித்து வழிபட்டனா். கிராமப்புற அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிச் சீருடை, நோட்டு, புத்தகங்கள் போன்றவற்றை ஜவுளிக்கடை உரிமையாளா் மு.கதிரேசன் வழங்கினாா்.

பன்னிரு திருமுறை வார வழிபாட்டுக் கழகக் குழுவைச் சோ்ந்த சிவனடியாா்கள் ஆா். முப்புடாதி, ஜெ. வெங்கடேசன், நாகராஜன், கே. ஜெகதீசன், ஏ. மாணிக்கம், எஸ்.பாா்த்திபன், சுந்தரி உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.